கோவை, ஜூன் 20 –
கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாராளுமன்ற காங்கிரஸ் எதிர்க் கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்களின் 55-வது பிறந்த நாளை முன்னிட்டு சூலூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் சூலூர் நகரத் தலைவர் ஆர்.கண்ணன் ஏற்பாட்டில் சூலூர் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்குக் கோவை வடக்கு மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி.எம்.சி. மனோகரன் தலைமையில் பிரட், பிஸ்கட் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் விஜயகுமார், மாவட்ட பொதுச் செயலாளர் ரங்கசாமி, மாவட்டச் செயலாளர் கோவிந்தசாமி, மீன் ஆறுமுகம், நகர துணைத் தலைவர் சாமிபிள்ளை, விஸ்வநாதன், சுதேவன், அட்டப்பாடி வேலுச்சாமி, மூத்தத் தலைவர் INTUC பழனிச்சாமி, INTUC ரவி பாலசுப்பிரமணியம், சூலூர் நகர நிர்வாகிகள் மற்றும் சுல்தான்பேட்டை வட்டாரத் தலைவர் சௌந்தரராஜன், கண்ணம்பாளையம் நகரத் தலைவர் சத்தியமூர்த்தி, காங்கேயம் பாளையம் ஊராட்சித் தலைவர் சிவக்குமார் உட்பட நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.