தூத்துக்குடி, ஆகஸ்டு 8 –
தூத்துக்குடியில் சுற்றுச்சுழல் பாதுகாப்பு குறித்து மாதாந்திர பணிக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மாதாந்திர சுற்றுச்சுழல் பாதுகாப்பு குறித்து மாவட்ட அளவிளான பணிக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது. இதில் உதவி ஆட்சியர் (பயிற்சி) தி. புவனேஷ்ராம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் பொறியாளர் எஸ்.வி. கலைவாணி, அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.



