சிவகங்கை, செப். 24 –
சிவகங்கை மின்வாரிய மேற்பார்வை செயற்பொறியாளர் அலுவலகம் முன்பாக மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம், ஒப்பந்த தொழிலாளர்களுக்கான ஊதியத்தை நேரடியாகவே வழங்குதல், தொடர்ந்து பத்தாண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில செயலாளர் எஸ். உமாநாத் தலைமையில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுப்புராம், மாவட்ட தலைவர் மோகனசுந்தரம், மாவட்ட துணை தலைவர் கருணாநிதி, கோட்டத் தலைவர் வே. ரமேஷ் பாபு ஆகியோர் போராட்டத்தில் கலந்து கொண்டு பணிநிரந்தரம் செய்ய வேண்டி முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் சங்க நிர்வாகிகள்
பாண்டியன், பாலமுருகன், லாரன்ஸ் ஜெபஸ்டியான் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



