சிவகங்கை, செப். 08 –
சிவகங்கை மாவட்டம் சாத்தரசன் கோட்டை அருகே உள்ள உதாரப்புலியில் புனித அடைக்கல அன்னை மாதா திருக்கோவில் திருவிழாவானது மிகவும் சிறப்பாக நடைபெற்றது. உதாரப்புலி, உடையரேந்தல், பொருசுப்பட்டி ஆகிய கிராம இறைமக்கள் வணங்கி வழிபடும் புனித அடைக்கல அன்னை மாதா கோவில் திருவிழாவினை முன்னிட்டு கெபி மற்றும் மணிக்கூண்டு புனிதப்படுத்தும் நிகழ்ச்சியை முன்னிட்டு இயேசு நாடகம் மற்றும் திருப்பலிகள் நடைபெற்றது. கோவில் திருவிழாவை முன்னிட்டு கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், தொழிலதிபர் கோலாந்தி ஆர். கோதண்டபாணி உள்ளிட்ட பலரும் நிதி உதவி அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து மறை மாவட்ட ஆயர் லூர்து ஆனந்தம், பங்குத் தந்தைகள் மற்றும் மாவட்ட மேனாள் கவுன்சிலர் சாந்தா சகாயராணி ஆகியோர் திருவிழாவில் கலந்து கொண்டனர். இதனிடையே காளையார்கோவில் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் தொழிலதிபர் கோலாந்தி ஆர். கோதண்டபாணி அவர்கள் ஞானசௌந்தரி எனும் புனித அடைக்கல அன்னை நாடகத்தை தொடங்கி வைத்து சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் சாந்தா சகாயராணி, உதாரப்புலி திமுக நிர்வாகி ஆல்வின்சுதன் சேவியர், திமுக செயற்குழு உறுப்பினர் தச்சனேந்தல் அக்கினிச்சாமி உள்ளிட்ட கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அறுசுவை அசைவ உணவு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதாரப்புலி, உடையரேந்தல், பொருசுப்பட்டி கிராமப் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.



