மதுரை மே 13
மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வினை காண மதுரை மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.
இந்நிலையில், அதிகாலை 3 மணி முதலாக கள்ளழகர் எழுந்தருளும் மண்டகப்படி பகுதிகளுக்குள் அனுமதிச்சீட்டு வைத்திருந்த முக்கிய பிரமுகர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த பூமிநாதன் (45) என்ற பொறியாளர் நின்று கொண்டிருந்தபோது திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார்.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அப்போது அவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது அனைத்து பகுதிகளிலும் தடுப்புகள் அமைக்கப் பட்டதால் ஆம்புலன்ஸ் வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது.
இதனால் நீண்ட நேரமாக ஆம்புலன்ஸ் அங்கும் இங்குமாக அலைந்து திரியக்கூடிய நிலை ஏற்பட்டது. பின்னர் வேறு வழியின்றி கள்ளழகர் எழுந்தருளும் பகுதியான தண்ணீர் நிரப்பப்பட்ட பகுதியில் இருந்து ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றது.
உடனடியாக அவரது உடலை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலயே அவர் உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
கள்ளழகரை தரிசனம் செய்வதற்காக மண்டகப்படிக்கு வந்த நபர் உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்தினர் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் மண்டகப்படி பகுதிகளில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு அதிக அளவிலான முக்கிய பிரமுகர்களை அனுமதித்துள்ளனர் இந்த நிலையில் கடுமையான நெரிசல் ஏற்பட்டதாகவும் காவல் துறையினர். சரியான கட்டமைப்பு வசதிகள் செய்யாததுமே இதற்கு முக்கிய காரணம் கடந்த இரண்டு ஆண்டுகளாக
இதே போன்ற உயிர்ப்பு ஏற்பட்டுள்ளது . எனவே காவல் துறையின் அலட்சியப் போக்கே இது போன்ற உயிரிழப்புக்கு காரணம் என்று கூறினார்.
மற்றொன்று கள்ளழகர் புறப்பாட்டின் போது தல்லாகுளம் அம்மா மெஸ் எதிரில் கூட்ட நெரிசலில் மின்சாரம் தாக்கி சந்தோஷ்(18) படுகாயம் – அரசு மருத்துவமனையில் அனுமதி சிகிச்சை பெற்று வருகிறார். இதனைத் தொடர்ந்து வைகையாற்று கரையோரம்
மீனாட்சி கல்லூரி – செல்லூர் செல்லும் சாலையில் கண்ணன்(46) என்ற நபர் சடலமாக மீட்பு – காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன் தகவல் அறிந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் சித்திரை திருவிழாவில் உயிரிழப்பு ஏற்பட்ட நபர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.