ராமநாதபுரம், ஜுலை 8 –
ஜுலை 6-ம் தேதி உலக விலங்குகளால் பரவும் நோய்கள் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் கால்நடை பராமரிப்புத்துறை, ராமநாதபுரம் நகராட்சி மற்றும் ராமநாதபுரம் பொது சுகாதார துறையின் சார்பில் தெரு நாய்களுக்கு இலவசமாக வெறிநாய் கடி தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாம் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. முகாமில் உதவி இயக்குனர் டாக்டர் மருதுபாண்டி, டாக்டர் ராஜசேகர் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர், சுகாதார ஆய்வாளர்கள் ஜோஸ்வா, சரவணகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இம்முகாமில் ராமநாதபுரம் 10-வது மற்றும் 11-வது வார்டுகளில் உள்ள 30 தெரு நாய்களுக்கு வெறி நாய் கடி தடுப்பூசி போடப்பட்டது.