ஊத்தங்கரை மே 24, 2025
சாமல்பட்டி ரயில்வே ஸ்டேஷனில் புதிதாக 8 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடத்தை பாரத பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி ரயில்வே ஸ்டேஷனில் அனைத்து வசதிகளும் கொண்ட எட்டு கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பண்ணா லால் தலைமையேற்று அனைவரையும் வரவேற்றார்.
இதில்
சிறப்பு விருந்தினர்களாக கிருஷ்ணகிரி எம்பி கோபிநாத், ஊத்தங்கரை
எம்எல்ஏ. தமிழ்ச்செல்வம், முன்னாள் எம்பி நரசிம்மன், பாஜக மாநில குழு உறுப்பினர் நரேஷ் குமார் மற்றும் ரயில்வே குழு உறுப்பினர் முன்னாள் மாவட்ட யூனியன் சேர்மன் ராஜேந்திரன் மற்றும் பாஜக காங்கிரஸ் திமுக அதிமுக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி காலை 9 .30 மணி அளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கி தேசபக்தி பாடல்கள், மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்காக நடத்தப்பட்ட ஓவிய போட்டியில் ஈரோடு, சேலம் பகுதி ரயில்வே பள்ளியில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் சிவலிங்கம் கோட்ட முதன்மை திட்ட மேலாளர் கங்கார் ராஜு முன்னாள் எம்பி நரசிம்மன் பாஜக மாநில குழு உறுப்பினர் நரேஷ் குமார் ரயில்வே குழு உறுப்பினர் ராஜேந்திரன்.
உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.