கோவை, ஜூலை 25 –
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பொள்ளாச்சி சங்கவி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கான கலைப் போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதில் காமராஜர், கக்கன், முன்னாள் பிரதமர் வி.பி. சிங் ஆகியோர் பிறந்தநாளை முன்னிட்டு மாநில அளவிலான கலைப் போட்டிகள் நடைபெற்றது. பொள்ளாச்சி சதுரங்க சங்கம் மற்றும் எழில் பல் மருத்துவமனை ஆகியவை பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து போட்டிகளை நடத்தினர்.
கலைப் போட்டிகளை மருத்துவர் சங்கவி அபி ஆதித்யன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் M. ரமேஷ்பாபு, பொள்ளாச்சி சதுரங்க சங்க செயலாளர் N. பரமேஸ்வரன் தலைமை வகித்தனர். பொள்ளாச்சி சதுரங்க சங்க தலைவர் G. கருணாநிதி வரவேற்புரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி வெ. ஆறுச்சாமி, பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் முனைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், வழக்கறிஞர் இமயவரம்பன் மற்றும் முதலுதவி சமூக நல அறக்கட்டளையின் தலைவர் முனைவர் அபு. இக்பால் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.