சங்கரன்கோவில், ஜூலை 1 –
சங்கரன்கோவில் சங்குபுரம் 3-ம் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமன் நாராயண சுவாமி அய்யா வைகுண்ட தர்மபதியில் வைகுண்டரின் 193 வது அவதார ஆண்டை முன்னிட்டு 49-வது தர்ம காட்சி நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.
இதனை முன்னிட்டு ஜூன் 28-ம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தர்மம் எடுத்தல் நிகழ்ச்சியும், ஜூன் 29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு அய்யா வாகனபவனி நிகழ்ச்சியும், சந்தனக்குடம் வீதி உலாவும், மதியம் 12 மணிக்கு உச்சி படிப்பு, அன்னதர்மம் நிகழ்ச்சி நடந்தது. இரவு 8 மணிக்கு புஷ்ப வாகனம் பவனி உலாவும் அதனைத் தொடர்ந்து இரவு 11 மணிக்கு அன்னதர்ம காட்சியும் நடந்தது. அதனை தொடர்ந்து ஜூன் 30-ம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு அலங்கார காட்சியும், மதியம் 11 மணிக்கு சின்ன மகாராஜா ஆட்சியும், அதனைத் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
நிகழ்ச்சிகள் அனைத்தும் குருநாதர் பாளை முடிமன்னன் நாராயணசாமி தலைமையில் நடந்தது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து, அதனைத் தொடர்ந்து அன்னதானத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அய்யா வைகுண்டர் பக்தர்கள் திரளானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர் ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.