சங்கரன்கோவில்: மே:12
சங்கரன்கோவில் நகராட்சி நகர் பகுதியில் கடைகள் மற்றும் சாலை வியாபாரிகளிடம் பாலிதீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி ஆணையாளர் சபாநாயகம் சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் ஆகியோர் ஆலோசனைப்படி முன்னதாக நகராட்சி வேன் மூலமாக ஒலிபெருக்கி வாயிலாக வியாபாரிகள் மற்றும் கடைகளில் பாலிதீன் பைகள் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது எனவும் மீறி விற்பனை செய்தாலோ கடைகளில் கண்டுபிடிக்கப்பட்டால் ரூபாய் ஆயிரம் முதல் 5000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிப்பு செய்யப்பட்டது கடைகள் மற்றும் சாலையோர வியாபாரிகளிடம் பாலிதீன் பைகள் உள்ளனவா என அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பாலிதீன் பைகளை ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் பறிமுதல் செய்தனர் ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் மாரிச்சாமி மாரிமுத்து ஆகியோர் கொண்ட குழுவினர் செய்திருந்தனர்.