கோவை, ஜூலை 22 –
கோவை மாவட்டம் டாடாபாத் ஆறுமூக்கு பகுதியில் ஸ்ரீ மருதமலை ஆண்டவர் பேக்கரி கிளை திறப்பு விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் நிர்வாக இயக்குனர் திரு சிவகணேசன், காந்திபுரம் நெல்லை லாலா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குனர் திரு மாரியப்பன், கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் திருமதி மீனா லோகு, கவுன்சிலர் கலாவதி போஸ் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.
இது குறித்து சுந்தர் கூறுகையில்: பொதுமக்களுக்கு சிறந்த தரத்துடனும் விலை குறைவாகவும் தருவதே எனது நோக்கமாகும். மேலும் எனது வெற்றிப் பயணம் தொடரும் என்று ஸ்ரீ மருதமலை ஆண்டவரே வேண்டி கொள்கிறேன் என்று தெரிவித்தார். இந்த பேக்கரியில் எழுதப்பட்டிருந்த கவிதைகள் பொதுமக்களை கவர்ந்தது.