கோவை, செப். 12 –
பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்காக தமிழகம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, இன்று கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்குட்பட்ட வார்டு எண் 35-ல் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் இடையர்பாளையம் சாலை VRG-மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, மேற்கு மண்டல தலைவர் தெய்வானை தமிழ்மறை, இடையர்பாளையம் பகுதி கழகச் செயலாளர் கா. மதியழகன், 35வது வார்டு மாமன்ற உறுப்பினர் சம்பத், வட்டச் செயலாளர் ஆர். குமரேசன், கல்விக் குழு தலைவர் மாலதி
மற்றும் அரசு அலுவலர்கள் துறை அலுவலர்கள், மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் முகாமில் குடிநீர் வரி, பட்டா மாற்றம், மகளிர் உரிமை தொகை, உள்ளிட்ட 14 துறைகள் தொடர்பாக பொதுமக்கள் பலர் மனுக்களை அளித்தனர். பல்வேறு மனுக்களை உடனடி தீர்வு வழங்கப்பட்டது.



