கோவை, ஆகஸ்ட் 21 –
கோவை மாவட்டம் சரவணம்பட்டி செட்டி தோட்டத்தில் ஜீவாந்தா மகேஸ்வரி டெவலப்பர்ஸ் வில்லாக்கள் துவக்க விழா மகேஸ்வரி டெவலப்பர்ஸ் நிறுவனர் மற்றும் தலைவர் கார்த்திக் சுந்தரசாமி தலைமையில், நல்லறம் அறக்கட்டளை தலைவருமான sp அன்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து ஜீவாந்தா அறிமுகம் குறித்து மகேஸ்வரி டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி நிதின் கார்த்தி கூறுகையில் இந்தியாவின் முதல் முழுமையான தானியங்கி விழாக்களுடன் மகேஸ்வரி டெவலப்பர்ஸ் சர்வதேச தரங்களுக்கு இணையான முன்னோடி மற்றும் சமீபத்திய தொழில்பத்தை கொண்டு வருகிறது. இது ரியல் எஸ்டேட் பிரிவில் ஒரு புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மகேஸ்வரி குழும நிறுவனர் கூறுகையில் மக்களின் பல்வேறு தேவைகள் மனதில் கொண்டு சிறப்பாக ஜிவான்தாவை வடிவமைத்துள்ளது.
இதில் சிறப்பு அம்சமாக மோஷன் சென்சார் லைட்டிங், தண்ணீர் கசிவை கண்டறியும் சென்சார், தானியக்க அடிப்படையிலான தண்ணீரை சூடாக்கும் இயந்திரங்கள், காபி மேக்கர், ஓவன் மற்றும் வாஷிங் மெஷின் உள்ளிட்ட வசதிகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இல்லாமல் இங்கு இருக்கும் அனைத்து வில்லாக்களுக்கும் நியூ மேட்டிக் நீர் பம்ப் முறையில் தண்ணீர் வழங்கும் வசதி, கேஸ் கசிவு சென்சர்கள், நடந்து செல்லும் போது அல்லது படிகளில் ஏறும் போது தவறி விழுந்துவிட்டால் அது குறித்து எச்சரிக்கை செய்யும் சென்சார்கள், திருடர் எச்சரிக்கை கருவிகள், வெளிச்சம் மற்றும் வெப்பநிலையை மாற்றக்கூடிய பல்வேறு அம்சங்கள் மின்சார பிரச்சனை இல்லாத பவர் பேக்அப் மற்றும் ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் மற்றும் மின்சார கண்காணிப்பு கருவிகள் என பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கவுண்டம்பாளையம் எம்எல்ஏ அருண்குமார், செல்வம் ஏஜென்சிஸ் நிர்வாக இயக்குனர் நந்தகுமார், இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபையின் தலைவரும் ஸ்ரீ வாரி பைனான்ஸ் அண்ட் லீசிங் கம்பெனியின் இயக்குனருமான ராஜேஷ் பி லுன்ட், அகில இந்திய பம்ப் உற்பத்தியாளர்கள் சங்க தலைவரும் டெக்கான் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக பங்குதாரருமான கார்த்திக் க்ரடாய் கோவை தலைவர் அரவிந்த் மற்றும் முக்கிய பிரபலங்கள் வாடிக்கையாளர்கள் மகேஸ்வரி டெவலப்பர்ஸ் ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த வில்லாவை வாங்குபவர்களுக்கு ஜிஎஸ்டி கட்டணம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



