கோவை, ஜூன் 24 –
கோவை மாவட்டம் அன்னூர் அருகே கோவில் பளையம் பகுதியில் புதிய ரோட்டரி சங்கம் தொடங்கி புதிய நிர்வாகிகளுக்கு நடப்பு ஆண்டுக்கான பதவியேற்பு விழா பட்டையம் வழங்கி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட ஆளுநர் பி.தனசேகர் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து சிறப்புரை ஆற்றினார். மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவ சதீஷ்குமார் புதிய நிர்வாகிகளுக்கு உறுதிமொழி வாசித்து ஏற்க வைத்தார்.
இதில் கோவில்பாளையம் சங்கத்தின் பட்டைய தலைவராக வி.பிரகாஷ், செயலாளர் மதன்குமார், பொருளாளர் செந்தில்குமார் மற்றும் சார்ஜெண்ட் மனோஜ்குமார் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் மாவட்ட நிர்வாகிகள் பொதுச் செயலாளர் சிவ பிரகாஷ், ஒருங்கிணைப்பாளர் லோகநாதன், ஆளுநர் செயலாளர் வேலுச்சாமி, சேர்மன் மெம்பர்ஷிப் சுரேந்திரன், உதவியாளர் பிரபு, புதிய சங்க ஆலோசகர் வரதராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார்கள்.



