கோவில்பட்டி, ஜூலை 16 –
கோவில்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை கனிமொழி கருணாநிதி எம்.பி தொடங்கி வைத்து மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சத்தியபாமா கல்யாண மண்டபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
இந்த நிகழ்வில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) தி. புவனேஷ் ராம், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகராட்சி தலைவர் கா. கருணாநிதி மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.