திருப்பூர், ஜூலை 14 –
கொங்கு வியாபாரிகள் நல சங்கத்தின் சார்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே அவர்களை நிறுவன தலைவர் காட்டன் பி. சக்திவேல் தலைமையில் சந்தித்து திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் சிறு, குறு வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள், கணவனை இழந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்க வேண்டும் என நேரில் சந்தித்து மனு வழங்கினார்.
இந்த சந்திப்பில் துணைத் தலைவர் சுரேஷ்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் ஹேமந்த், தலைமை செயலாளர் ராஜா முகமது, வடக்கு மாவட்ட செயலாளர் தேவராஜ் எ. கிட்டுச்சாமி தெற்கு மாவட்ட செயலாளர் அப்பாஸ், தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராணி, தெற்கு மாவட்ட இணை செயலாளர் ஜெயந்தி மற்றும் பலர் இருந்தனர்.