தென்காசி, ஜூலை 9 –
கைத்தறித்துறை அமைச்சர் காந்தியிடம் ராஜா எம்எல்ஏ அளித்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறிகள் இயக்கப்பட்டு வருகின்றது எனவும் இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 15,000 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது இந்த 3 மாவட்டங்களில் உற்பத்தி செய்யும் சேலைகளுக்கு வருடத்திற்கு 2.5 லட்சம் சேலை உற்பத்தி பண்ண பாவுநூல் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் இந்த மாவட்டங்களில் நெசவுத்தொழில் செய்யும் மக்கள் அதிகமாக உள்ளனர். அவர்களின் முழுநேர தொழிலே நெசவு செய்வதுதான். அவர்களுக்கு 10 லட்சம் சேலைகளுக்கான பாவுநூல் தேவைப்படுகிறது. ஆனால் 2.5 லட்சம் சேலைகளுக்கான பாவுநூல் வருவதால் நெசவுத்தொழிலாளர்கள் நீண்ட காலம் வேலை இன்றி உள்ளனர். எனவே 2.5 லட்சம் சேலைகளுக்கு வழங்கப்பட்ட பாவுநூல் எண்ணிக்கையை 10 லட்சம் சேலைகளுக்கான பாவுநூல் வழங்க என அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் காந்தி தற்போது வழங்கப்பட்டு வரும் 2.5 லட்சம் பாவு நூல்களை தற்போது உடனடியாக 4 லட்சம் ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும், மேலும் ஒரு லட்சம் சேர்த்து விரைவில் 5 லட்சம் பாவு நூல்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். உடனடியாக நடவடிக்கை எடுத்த அமைச்சருக்கும் இதற்கு உறுதுணையாக இருந்த தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ விற்கும் கைத்தறி நெசவாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.