கன்னியாகுமரி , அக் : 14
கன்னியாகுமரி மாவட்டம் ஆறுகாணி, அருமனை, குழித்துறை முக்கிய சாலை பல இடங்களில் குண்டும் குழியுமாக சேதமடைந்து, விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
குறிப்பாக மருதம்பாறை, சானல்கரை, ஆலஞ்சோலை, களியல், கிளாத்தூர் மற்றும் அருமனை சந்திப்பு பகுதிகளில் சாலை மிகவும் மோசமாக உள்ளது. பெரிய பள்ளங்களில் இருசக்கர வாகனங்கள் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக கவனத்தில் கொண்டு, சாலையை தார் கலவை கொண்டு சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.



