மார்த்தாண்டம், ஜூலை 14 –
மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். இவர் டெம்போ ஓட்டுனராக உள்ளார். இவர் கடந்த 34 ஆண்டுகளுக்கு மேலாக ஆறு, குளம், சாலை போன்றவைகளில் கிடக்கும் சடலங்களை தகவலின் அடிப்படையில் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தனது சொந்த வாகனத்திலேயே மருத்துவமனைகளில் சேர்த்து பிரேத பரிசோதனை முதல் உடனிருந்து தன்னலம் பாராமல் இறுதிச் சடங்கு செய்யும் நிகழ்ச்சிகளும் செய்து வருகிறார்.
இதுவரை 750க்கு மேற்பட்ட சடலங்களை எடுத்து புதைத்து சேவை செய்துள்ளார். இவரது சேவையை பாராட்டி குழித்துறை நகர்மன்ற தலைவர் பொன் ஆசை தம்பி தலைமையில் அமைச்சர் மனோ தங்கராஜ் சமூக சேவை ராஜகோபாலுக்கு சிறந்த சமூக சேவைக்கான விருது வழங்கி கௌரவித்தார்.