குளச்சல், ஜூலை 25 –
குளச்சல் அருகே பிலாங்கரை காலணியை சேர்ந்தவர் கமலம் (72). வெள்ளியாகுளம் ஏலா பகுதியில் உள்ள தோப்பில் வேலை செய்து வந்தார். இதற்காக அங்கு தகர கொட்டகை அமைத்து தனியாக தங்கி இருந்தார். இவருக்கு கண் பார்வை பாதிப்பு உள்ளது. பக்கத்தில் உள்ள ஒரு பெண் உணவு கொடுத்து பராமரித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டில் கமலம் தீயில் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். அங்கு மண்ணெண்ணெய் சிந்தி கிடந்தது.
எனவே மண்ணெண்ணெய் விளக்கு சரிந்து கமலம் தீயில் சிக்கினாரா? அல்லது தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்று தெரியவில்லை. இது குறித்து குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சம்பவத்தை அறியாமல் பக்கத்தில் உள்ள ஒரு பெண் மூதாட்டிக்கு சாப்பாடு கொண்டு வந்தார். கருகிய மூதாட்டியை கண்டதும் அந்த பெண் கதறி அழுதார்.