தென்காசி, ஜூலை 10 –
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் சாரல் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் சாரல் திருவிழாவானது ஜூலை 19-ம் தேதி துவங்கி ஜூலை 27-ம் தேதி வரை மொத்தம் ஒன்பது நாட்கள் நடைபெறுகிறது என்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்தார்.
சாரல் திருவிழாவில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பாக ஐந்தருவி பகுதியில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் 19.7.2025 முதல் 22 .7.2025 வரை மலர் கண்காட்சி நான்கு நாட்கள் நடைபெறுகிறது. சாரல் திருவிழா நடைபெறும் ஒன்பது நாட்களும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது.