சங்கரன்கோவில், செப். 23 –
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் ‘ஓரணியில் தமிழ்நாடு’ தீர்மானம் ஏற்பு பொதுக்கூட்டம் குருவிகுளம் பேரறிஞர் அண்ணா திடலில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ தலைமையில் நடந்தது. தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, யூஎஸ்டி சீனிவாசன், பரமகுரு, மாநில மருத்துவர் அணி துணைசெயலாளர் செண்பக விநாயகம், மாநில வர்த்தகர் அணி இணைச் செயலாளர் முத்துச்செல்வி, மாவட்ட அவைத்தலைவர் சுப்பையா, மாவட்ட பொருளாளர் சரவணன், துணை செயலாளர்கள் மனோகரன், ராஜதுரை, புனிதா முன்னிலை வகித்தனர். குருவிகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் கடற்கரை வரவேற்றார். மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர் பிரபாகரன் தொகுத்து வழங்கினார். தொடர்ந்து தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு தீர்மானம் ஏற்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
கூட்டத்தில் திராவிடர் கழக துணை பொதுச் செயலாளர் மதிவதினி கலந்து கொண்டு பேசுகையில்: தமிழகத்தில் பி.ஜே.பி – அ.தி.மு.க அணி, இந்த கூட்டணி உங்கள் குழந்தைகளுடைய கல்வி கனவை நாசமாக்கக்கூடிய எடப்பாடி தலைமையிலான அணி. அது எடப்பாடி தலைமைதான் என நான் சொல்கிறேன். அவர் சொல்லவில்லை. இன்னும் பி.ஜே.பி. தலைமையா? எடப்பாடி தலைமையா? அவர்களே இன்னும் முடிவு பண்ணவில்லை. நம் பிள்ளைகளின் கல்விக்காக தைரியமாக ஒன்றிய அரசை எதிர்த்து நின்று தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் என்று உறுதியோடு நிற்கக் கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பக்கம் இருக்க போகிறோமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி விரிவாக பேசினார். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் லாலா சங்கரபாண்டியன், பெரியதுரை, நகர செயலாளர் சங்கரன்கோவில் பிரகாஷ், மாணவரணி உதயகுமார், சார்பு அணி துணை அமைப்பாளர்கள் சுற்றுச்சூழல் அணி ஜலால், ஜெயக்குமார் உள்பட மாவட்ட ஒன்றியம் நகர கிளை பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.



