சங்கரன்கோயில், செப். 30 –
தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ராஜா சிறு குறு தொழில் துறை அமைச்சர் அன்பரசனிடம் நேரில் சந்தித்து அளித்துள்ள கோரிக்கை மனுவில் குருக்கள்பட்டியில் அரசு கையகப்படுத்தியுள்ள 37, 390 ஏக்கர் நிலத்தில் உள்கட்ட அமைப்பு சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. சிட்கோ இடத்தினை சிப்காட் நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் திட்டம் இருப்பதால் அந்த இடத்தில் தொழிலதிபர்கள் தொழில் செய்வதற்கு ஏதுவாக தொழிற்பேட்டை சிட்கோ இடத்தின் ஒரு சென்டின் விலை ரூபாய் 25 ஆயிரத்தை 10 ஆயிரமாக குறைத்து விற்பனை செய்தால் தொழில் அதிபர்கள் இடத்தினை வாங்கி அதிக அளவு தொழில் கூடங்கள் அமைத்து பொதுமக்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்குவார்கள்.
மேலும் சிட்கோ இடம் அருகே உள்ள தனியார் இடங்கள் ஒரு சென்டின் விலை 8 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆகவே சிட்கோ இடத்தினை குறைத்து விற்பனை செய்யும்படியும் தற்போது விசைத்தறியாளர்கள் மாஸ்டர் வீவர்ஸ் அசோசியேசன் நிர்வாகத்தினர் புதிய தொழில் பூங்காவில் சாயப்பட்டறை கழிவு நீர் சுத்திகரிக்கும் நிலையம் அமைத்து தரும்படியும் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் ஆறு லட்சம் விசைத்தறிகளை நம்பி உள்ள 90 லட்சம் தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு விடியல் தரும் திட்டமாக அமையும் வகையில் தற்போது மாடர்ன் டெக்ஸ்டைல்ஸ் அசோசியேசன் என்ற நிறுவனம் சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு குறைந்தபட்சமாக 5 ஏக்கர் நிலம் கேட்கிறார்கள். சிட்கோவிதிகளின்படி அதிகபட்சம் ஒரு ஏக்கர் நிலம் தனி ஒருவருக்கு கொடுக்க முடியும் என்ற நிலை உள்ளது.
இருந்த போதும் இந்த சுத்திகரிப்பு நிலையம் சாய சாலை திட்டம் அமைய வேண்டிய நிலை உள்ளதால் மாஸ்டர் வீவர்ஸ் அசோசியேசன் ஆலோசனைக் கூட்டத்தில் விசைத்தறியாளர்கள் என்னிடம் வழங்கி உள்ள கோரிக்கையினை ஏற்று குருக்கள்பட்டி தொழிற்பேட்டை ஜவுளி பூங்கா சிறப்பாக அமைய சிட்கோ இடத்தினை ரூபாய் 25,000/- இலிருந்து 10,000 ஆக குறைத்து விற்பனை செய்யும்படியும் ராஜா எம்எல்ஏ மாஸ்டர் வீவர்ஸ் சங்கத்தினர் இணைந்து தொழில்துறை அமைச்சர் அன்பரசனிடம் கோரிக்கை மனு அளித்தனர். மாஸ்டர் வீவர்ஸ் செயலாளர் சுப்பிரமணியன் சங்கரன்கோவில் திமுக நகர செயலாளர் பிரகாஷ் உடன் இருந்தனர்.



