சிவகங்கை, ஜூலை 11 –
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் மணிமண்டபத்தில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் 101-வது பிறந்தநாள் அரசு விழாவினை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி குன்றக்குடி ஆதினம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பலம் அடிகளார் அவர்கள் முன்னிலையில் அரசின் சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு. ராஜசெல்வன், திருப்பத்தூர் வட்டாட்சியர் மாணிக்கவாசகம் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.