கிருஷ்ணகிரி அக் -01
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம், வீட்டுமனைப் பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை,சாலை வசதி, மற்றும் மின் இணைப்பு, போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து 257 மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தினை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தாட்கோ சார்பாக, ரூ.50 ஆயிரம் மதிப்பில் தற்காலிக ஊனம் உதவித்தொகை 1 பயனாளிக்கும், ரூ.8,500 மதிப்பில் கல்வி உதவித்தொகை 3 பயனாளிகளுக்கும், ரூ.18 ஆயிரம் மதிப்பில் திருமண உதவித்தொகை 4 பயனாளிகள் என மொத்தம் 8 பயனாளிகளுக்கு ரூ.76 ஆயிரத்து 500 மதிப்பிலான காசோலைகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் .அ.சாதனைக்குறள், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) .பன்னீர்செல்வம், தாட்கோ மாவட்ட பொது மேலாளர் .வேல்முருகன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



