கிருஷ்ணகிரி, ஆக. 7 –
தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு வாழ்ந்த தமிழகத்தின் சிற்பி முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் ஏழாவது ஆண்டு நினைவு தினமான இன்று கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஜெகதேவி கிராமத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே. மதியழகன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் ஜே.கே. கிருபாகரன் தலைமையில் ஜெகதேவி பேருந்து நிலையம் அருகில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர் ராஜ் (எ) ராஜதுரை, இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் எஸ். பாலாஜி, தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் எஸ். ராதாகிருஷ்ணன், அஞ்சூர் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் நெடுஞ் செழியன், கனகராஜ், ராஜேந்திரன், நந்தகுமார், ஜமா, சக்கரவர்த்தி, முருகேசன், சீதாராமன், நவாப், எம்.ஜி. சுப்பிரமணி, தகவல் தொழில் நுட்ப பிரிவு அருண், கோவிந்தன், முருகன், செந்தில், அருள், ஜெ.கே. குமார், அனீஸ் பாபு, ராமமூர்த்தி, ஜோதி இராவணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் முருகன், ரமேஷ், பாபு, நஞ்சுண்டன் மற்றும் சுண்டன், சுரேஷ், பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும் கலந்து கொண்டு கலைஞர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.