கிருஷ்ணகிரி, செப். 17 –
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பாக மாவட்ட அளவிலான எச்.ஐ.வி எயிட்ஸ் மற்றும் பால்வினை நோய், போதை பொருள் பழக்கம் ஒழிப்பு பற்றிய தீவிர விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் துவக்கி வைத்து ஆட்டோக்களில் எயிட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு குறித்த ஸ்டிக்கர்களை ஒட்டினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ. சாதனைக்குறள், மாவட்ட எயிட்ஸ் கட்டுபாட்டு அலகு திட்ட மேலாளர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.



