கிருஷ்ணகிரி, ஆக 3 –
டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்தியாவின் மிகப்பெரிய நகை சில்லறை விற்பனை பிராண்டான தனிஷ்க் அமைதி, செழிப்பு மற்றும் புனிதமான தொடக்கங்களுடன் ஆரம்பிக்கும் ஆடிப்பெருக்கு பருவத்தை கொண்டாடும் வகையில் “அகல்யம்” என்ற புதிய ஆபரண தொகுப்பை அறிமுகம் செய்துள்ளது. ஒலியையும், பெரும் ஆற்றலையும் தரும் விளக்கு மீது கொண்டிருக்கும் அற்புதமான உணர்வினால் ஈர்க்கப்பட்டு அகல்யம் நகைத் தொகுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் பாரம்பரியத்தில் பல தலைமுறைகளாக புனிதமான ஒன்றாக வேரூன்றி இருக்கும் தீப ஒளி, ஞானம் மற்றும் தெய்வீகம் ஆகியவற்றை குறிக்கும் அடையாளமாகவும், இந்தத் தொகுப்பு புனிதமானவற்றையும், அதை வெளிப்படுத்தும் உணர்வுகளையும், கௌரவிக்கும் வகையில் அகல்யம் அறிமுகமாகியுள்ளது. அகல்யம் நகை தொகுப்பின் அறிமுக விழாவில் வணிக மேலாளர் கோவிந்தராஜ் பேசும்போது, இவற்றின் விலை 60 ஆயிரம் ரூபாய் முதல் தொடங்குவதாகவும், தனிஷ்க்-ன் பயணத்தில் தமிழ்நாடு மிகவும் சிறப்பான ஒரு இடத்தை பிடித்துள்ளதாகவும், பாரம்பரிய தமிழ் விளக்குகளில் இருந்து இந்நிறுவனம் உத்வேகம் பெற்று “அகல்யம்” நகை தொகுப்பை வடிவமைத்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு புதுமைப் பெண்ணுக்கும் மரியாதை செலுத்துவதற்கான வாய்ப்பாக இது அமைந்துள்ளதாகவும், ஆடிப்பெருக்கு சீசனை தனிஷ்க் உடன் இணைந்து புதிய தொடக்கங்களை கொண்டாட அனைவரையும் வரவேற்பதாக கூறினார். தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் மீது 20% வரை தள்ளுபடி தர நிறுவனம் முன் வந்துள்ளதாகவும் கூறினார். இந்த அகல்யம் அறிமுக விழாவில் குத்துவிளக்கேற்றி முதல் நிகழ்ச்சியாக பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய நகைகளை அணிந்து ரேம்ப்வால்க் செய்த பெண்மணிகளுக்கு அனுராதா காம்ப்ளக்ஸ் மற்றும் தனிஷ்க் பிரான்சிஸ் A. ஆனந்தகுமார் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.