கிருஷ்ணகிரி, ஜூலை 31 –
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், கட்டிகானப்பள்ளி ஊராட்சி கிராம அளவிலான கூட்டமைப்பு கட்டிட வளாகத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், துறை வாரியாக அரங்குகள் அமைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே. மதியழகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தனஞ்செயன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.