போயம்பாளையம், அக். 17 –
திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டல கூட்டம் போயம்பாளையம். நஞ்சப்பாநகரில் உள்ள அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் தம்பி கோவிந்தராஜ் உதவி கமிஷனர் சக்திவேல் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தொடர்பாக பேசியதாவது: தமிழ்செல்வி (அ.தி.மு.க.) 16-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் புதிய தெருவிளக்குகள் அமைத்து கொடுக்க வேண்டும். குமாரசாமிநகரில் கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும். ஸ்ரீநகரில் கிடப்பில் போடப்பட்ட சாக்கடை கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
ராஜேந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு) – 31-வது வார்டுக்குட்பட்ட மழைநீர் வடிகால் மற்றும் சாக்கடை கால்வாய்களை தூர்வார வேண்டும். ஆழ்குழாய் கிணறு பணி தொடங்கும் போது அதிகாரிகள் பார்வையிட வேண்டும். கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பிரிட்ஜ்வேகாலனி பகுதியில் தார்சாலையை உடனடியாக அமைக்க வேண்டும். தெருவிளக்கு தானியங்கி பெட்டிகளை சரி செய்ய வேண்டும். புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளுக்கு விரைவில் டெண்டர் விட வேண்டும்.
லோகநாயகி கருப்பசாமி (தி.மு.க.) 3-வது வார்டுக்குட்பட்ட ஏ.டி. காலனி பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும். பூலுவபட்டி மெயின் ரோட்டில் தடுப்பான்களை வைத்து சாலையை அடைத்துள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.
செழியன் (த.மா.கா.) 17-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் தார்சாலை மற்றும் சாக்கடை கால்வாய்களை அமைத்துக்கொடுக்க வேண்டும். சாக்கடை கால்வாய் அமைத்துக் கொடுக்க வேண்டும். விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் 4-ம் குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
6-வது வார்டுக்குட்பட்ட கோபால்சாமி (தி.மு.க.)-விடுபட்ட பகுதிகளில் பகுதிகளில் தார் சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும். பொதுக்கழிப்பி காங்கிரீட்டங்களையும் பாதாள சாக்கடையுடன் இணைக்க வேண்டும். ரோடு அமைத்துக்கொடுக்க வேண்டும்..
கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ் பதிலளித்து பேசியதாவது: 2-வது மண்டலத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி சாக்கடை கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டு வருகிறது.
தீபாவளி பண்டிகைக்கு பின்னர் தொழிலாளர்களை கொண்டு கால்வாய்கள் சுத்தம் செய்யப்படும். ஓம்சக்தி கோவில் அருகே கால்வாய் ஓரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தண்ணீர் எளிதாக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அறிவொளி நகர் பகுதியில் நல்லாறு தூர்வாரப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் அதிகாரிகள், கவுன்சிலர்களிடம் தெரிவித்தார். கூட்டத்தில் மாநகராட்சி ஊழியர்கள் கொண்டனர்.



