நாகர்கோவில் மே 3
குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக செய்தி குறிப்பு. கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையில் முதிர்ந்த நிலையில் கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்களை பொது ஏலத்தில் விடுவதற்கு முடிவு செய்யப்பட்டு வருகின்ற 16.05.2024 அன்று காலை 10.00 மணிக்கு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மறவன்குடியிருப்பு காவல் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து ஏலம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. ஏலம் விடப்படும் காவல் வாகனங்கள் மேற்படி மைதானத்தில் அன்றைய தினம் காலை 06.00 மணி முதல் 10.00 மணி வரை பார்வைக்காக வைக்கப்படும். ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 16.05.2024 அன்று காலை 06.00 மணி முதல் 10.00 மணிக்குள் ரூபாய் 1000/- முன் வைப்பு தொகையினை செலுத்தி தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஏலம் எடுத்த நபர்கள் வாகனங்களுக்கு ஏலத்தொகையுடன் GST விற்பனை வரியும் சேர்த்து அன்றைய தினமே செலுத்த வேண்டும் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.



