நாகர்கோவில் மே 16
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள சி.டி.எம்.புரம் பகுதியில் உள்ள கால்வாயில் செல்லும் தண்ணீரை மாநகராட்சி குழாய்கள் வழியாக கடலில் கொண்டு சேர்க்கும் நாகர்கோவில் மாநாகராட்சியின் இந்த திட்டத்தால் கால்வாய் தண்ணீரை நம்பி இருந்த 1000 ஏக்கர் விவசாயம் பாழாகும், வலம்புரி விளையில் இருந்து வெளியேறும் பாதாள சாக்கடைக்கான சுத்திகரிப்பு குடிநீரை தெங்கம்புதூர் சானலில் விடாமல் சிடிஎம் புரம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில் விட வேண்டும் எனக் கூறி
சித்திரை திருநாள் மகாராஜபுரம் ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திட்ட பணிகளை செய்யவிடாமல் அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.
இதனை தொடர்ந்து போலீசார் அப்பகுதிக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தை தோல்வியுற்ற நிலையில் இத்தகவல் அறிந்த கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியரிடமும், அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன்பின் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ அதிகாரிகளிடம் இப்பகுதி பொதுமக்களையும் விவசாயிகளையும் மற்றும் மக்கள் பிரதிநிதிகளையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமான முறையில் இப்பணியினை நடத்திட வேண்டும் பொது மக்களின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அதன் அடிப்படையில் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அவரின் வேண்டுகோளின் அடிப்படையில் அதிகாரிகளும் விவசாயி மற்றும் மக்கள் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான முடிவு எடுப்பதாக தெரிவித்தனர்.