கோவில்பட்டி, ஜுலை 16 –
முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மெயின் ரோட்டில் அமைந்துள்ள கர்மவீரர் காமராஜரின் திருவுருவச்சிலைக்கு அதிமுக அமைப்பு செயலாளர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ அவர்களின் ஆலோசனையின் பேரில் அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளரும் கோவில்பட்டி நகர் மன்ற உறுப்பினருமான எம்.ஆர்.வி. கவியரசன் தலைமையில் கோவில்பட்டி நகர அம்மா பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர் அழகர்சாமி, நகர அண்ணா தொழிற்சங்க செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்வில் நகர துணை செயலாளர் மாதவராஜ், ஒன்றிய மாணவரணி தலைவர் அருண்குமார், கிளைச் செயலாளர்கள் சிந்தாமணி, நகர் வெற்றி சிகாமணி, படர்ந்தபுளி ராஜ்மோகன், மணியாச்சி ராஜாராம், இளைஞர் பாசறை நிர்வாகிகள் சூரியா, சக்தீஸ்வரன், அருண்பாலாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.