திருப்பத்தூர், ஜூலை 1 –
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த காமனூர்தட்டு ஊராட்சியில் வன்னியர் மக்கள் கட்சி சார்பில் கிராமங்கள் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் பேனா பென்சில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த காமனூர்தட்டு மலைவாழ் மக்கள் சுமார் 60 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட பொருட்கள் வன்னியர் மக்கள் கட்சி சார்பில் நேரடியாக சென்று வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர் வன்னியர் மக்கள் கட்சி திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் ஜி. முருகன் அவர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் வன்னியர் மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.