வேலூர், செப், 06 –
வேலூர் மாவட்டம் காட்பாடி ஊராட்சி ஒன்றியம் பிரம்மபுரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை பிரம்மபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தனர். இம்முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகுமார், காட்பாடி துணை வட்டாச்சியர் சிவக்குமார், பிரம்மபுரம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குறைகளுக்கான மனுக்களை துறை அலுவலர்களிடம் வழங்கினார்கள். பிரம்மபுரம் பகுதியை சேர்ந்த சிறுத்தை சிவராமன் என்பவர் அளித்த மனுவுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு ஆணை சான்று வழங்கினர்.



