சுசீந்திரம், ஜீலை 28 –
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை சுசீந்திரம் அருகே உள்ள தேரூரில் பிறந்து கோட்டார் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றியவர். அவர் தனது கவிதையால் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவர். அவரது 150 வது பிறந்த நாளை முன்னிட்டு சுசீந்திரம் கிராம நிர்வாக அலுவலகம் அருகே அமைந்துள்ள கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை வெண்கல சிலைக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் அழகு மீனா மாலை அணிவித்து இன்று காலை மரியாதை செலுத்தினார். அவருடன் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜெகத் பிரைட், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் முருகன், சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுசுயா, துணைத் தலைவர் சுப்ரமணிய பிள்ளை, சுசீந்திரம் வருவாய் ஆய்வாளர் பிரேம கீதா, கிராம நிர்வாக அதிகாரி வளர்மதி, வார்டு உறுப்பினர் காசி உட்பட அரசு அதிகாரிகள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.