கருங்கல், ஜூலை 29 –
கருங்கல் அருகே மத்திகோடு பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ் ஆண்டனி மகன் சாகித் ஜெட்லி (20). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரிக்கு பஸ்ஸில் செல்லும் போது திங்கள் நகரை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அந்தப் பெண் நாகர்கோவில் ஒரு பியூட்டிஷியன் படிப்பதற்காக பஸ்ஸில் தினமும் சென்று வந்துள்ளார். அந்தப் பெண்ணிற்கு திருமணமாகி உள்ளது. ஆனால் திருமணத்தை மறைத்து சாகித் ஜெட்லியிடம் பழகி உள்ளார்.
இந்த விவகாரம் இரண்டு வீட்டாருக்கும் தெரியவந்து எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் ரெண்டு பேரும் வீட்டை விட்டு வெளியேறினார்கள். இருவரும் பின்னர் நெல்லையில் தங்கி உள்ளனர். இதையடுத்து அந்தப் பெண்ணின் கணவர் இரணியல் போலீசில் மனைவியை காணவில்லை என புகார் கூறியிருந்தார். அந்த புகார் பேரில் போலீசார் அந்த பெண்ணை மீட்டனர். ஆனால் பெண் கணவருடன் செல்ல மறுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த பெண்ணிடம் சிக்கிய தனது சான்றிதழ், ஏடிஎம் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பெண்ணின் கணவரிடம் சாகித் ஜெட்லீ கேட்டுள்ளார். உடனே அவர் ஆவணங்களை தர முடியாது எனக் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சாகித் ஜெட்லி பெண்னுடன் வெளியே சென்று எடுத்துக் கொண்ட போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இதை பார்த்த பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து பெண்ணின் கணவர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் போரில் போலீசார் நேற்று காலை 6 மணி அளவில் சாதிக் ஜெட்லியை தேடி வந்துள்ளனர். ஒருவர் போலீஸ் உடையிலும், மற்ற நான்கு பேர் சாதாரண உடை அணிந்தும் வந்துள்ளனர். தொடர்ந்து வீட்டுக்குள் புகுந்த போலீசார் சாகித் ஜெட்லியை பிடித்தனர். அவர் குளிக்க டவல் மட்டும் அணிந்திருந்தார். அப்போது சாதிக் ஜெட்லியின் பாட்டி சூசை மரியாள் ஜெட்லியை பிடித்து செல்லாமல் இருக்க தடுத்துள்ளார். அப்போது அங்கு சென்ற போலீசார் சூசை மரியாளை பிடித்து தள்ளியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் சாதிக் ஜெட்லி அங்கிருந்து உடை மாற்றி விட்டு தப்பி சென்றுள்ளார். போலீசார் விரட்டி சென்றனர்.
இந்த நிலையில் கீழே விழுந்த மூதாட்டி படுகாயம் அடைந்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று போது அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த நிலையில் வர்கீஸ் ஆன்டனி மனைவி சந்திரகலா என்பவர் ஆன்லைனில் போலீசார் தள்ளியதில் சூசை மரியாள் இறந்து விட்டதாக புகார் தெரிவித்துள்ளார். அவர் சாவுக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை வேண்டும் என கூறி உள்ளார். இதனால் கருங்கல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் மூதாட்டி உடல் குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு அனுபியுள்ளனர்.