கன்னியாகுமரி, ஜூலை 9 –
குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவுப்படி கன்னியாகுமரி டிஎஸ்பி. மகேஷ் குமார் மேற்பார்வையில் கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறையினர் விபத்துகளை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக சுற்றுலா தலமான கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு கன்னியாகுமரி போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்தும் 18 வயது குறைவான குழந்தைகள் மோட்டார் வாகனங்களை இயக்க கூடாது, இருசக்கர வாகனங்கள் ஓட்டும் போது வாகனத்தில் பயணிக்கும் இருவரும் தலைக்கவசம் அணிவதை கடைபிடிக்க வேண்டும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிறைவாக பயணிகள் அனைவருக்கும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.