திருப்பத்தூர், ஜூலை 10 –
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் BDA – பூத் டிஜிட்டல் ஏஜென்ட் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டமானது மாவட்ட கவுன்சிலர், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர், மத்திய ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. கந்திலி ஒன்றிய பெருந்தலைவர் திருமதி திருமுருகன் அனைவரையும் வாழ்த்தி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பேசுகையில்: திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கந்திலி மத்திய ஒன்றியத்தில் 38 பூத் கமிட்டிக்கு BDA – (பூத் டிஜிட்டல் ஏஜென்ட்) பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பொறுப்பாளர்கள் அந்தந்த பகுதிக்கு உட்பட்ட பூத் வாக்காளர்களை நேரில் சந்திப்பது, திராவிட மாடல் அரசின் திமுக தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும் தளபதி வழிகாட்டுதலில் சிறப்பாக வழிநடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு கிராமம், வட்டத்திற்கு சென்று கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, தங்களின் திறன் சார்ந்த கழகப் பணியாக உருவாக்கப்பட்ட இந்த வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். திமுக உறுப்பினர்களாக தொடர்ந்து ஆர்வத்துடன் இளைஞர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் என பலரும் கட்சியில் சேர்கின்றனர்.
ஒவ்வொரு பகுதிக்கும் நேரடியாக சென்று வாக்காளர் பட்டியலை வைத்துக் கொண்டு அப்பகுதியில் உள்ள மாவட்ட பொறுப்பாளர்கள், பிரதிநிதிகள், ஒன்றிய பொறுப்பாளர்கள், அணிகளை சார்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் கிளை செயலாளர்களுடன் நேரடி களத்தில் “மக்களுடன் ஸ்டாலின் ” திட்டத்தின் மூலம் சிறப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த பணியினை வேலையாக இல்லாமல் கட்சியின் நலத்திட்டங்களை மக்களிடம் சேர்க்கும் மகத்தான பணியாக கருத வேண்டும் என வாழ்த்தி பேசி ஆலோசனைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க புத்தகம், எழுது பொருள், குறிப்பேடுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒன்றியத்திற்கு உட்பட்ட BDA – 38 பொறுப்பாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள் சக்கரவர்த்தி, ஆர்வில், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் தமிழரசன், துணை அமைப்பாளர்கள் பிரபாகரன், கோபிநாத், மாதேஷ், யுவராஜ், ஆதியூர் கிளை செயலாளர் செந்தில், அன்பு மற்றும் கட்சியினை சேர்ந்த முன்னோடிகள் பலரும் கலந்து கொண்டனர்.