கிருஷ்ணகிரி, அக்டோபர் 7 –
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காரப்பட்டு அடுத்த கதவனி, கருமாண்டபதி கீழ் மத்தூர், ரெட்டிபட்டி, ஆகிய ஊராட்சிகளுக்கு தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பூத்கமிட்டி ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் டி.எம். தமிழ் செல்வம் முன்னிலை வகித்தார்.
இதனை தொடர்ந்து கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே.பி. முனுசாமி பேசியதாவது: ஒவ்வொரு உறுப்பினர்களும் புதிய உறுப்பினர்களை நமது கழகத்திற்கு சேர்ப்பது நமது கடமை என்று அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.இ. கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் மருத்துவர் இளையராஜா, ஒன்றிய மத்திய ஒன்றிய செயலாளர் சாமிநாதன் கழகச் செயலாளர்கள் வேடியப்பன், வேங்கன், இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் தொழிலதிபர் தீபக் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய, நகர, கழகப் பொறுப்பாளர்கள் மகளிர் அணி பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.



