சென்னை, ஜூலை 04 –
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணினி பயிற்சி திட்ட பயிற்றுநர்கள் சங்கம் நடத்தும் பணி பாதுகாப்புடன் கூடிய நல்வாழ்வு அமைத்து தர வேண்டி உண்ணாநிலை போரட்டம் சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் நடைபெற்றது. கணினி பயிற்சி திட்ட பயிற்றுநர்கள் சங்க செயலாளார் எஸ். பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற உண்ணாநிலை போராட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பாலசிங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில துணை பொதுச் செயலாளார் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை மத்திய மாவட்டச் செயலாளர் செல்வா ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றி உண்ணாநிலை போராட்டத்தை பழரசம் கொடுத்து முடித்து வைத்தனர். மேலும், இந்நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் ஜி. சரவணன் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட கணினி பயிற்சி திட்ட பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.