பெருமாநல்லூர், ஜூலை 12 –
ஓரணியில் தமிழ்நாடு தி.மு.க. பிரசார திட்டம் மூலமாக திருப்பூர் வடக்கு ஒன்றியம் கணக்கம்பாளையம் மற்றும் பெருமாநல்லூர் பகுதிகளில் வீடு, வீடாக சென்று தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதற்காக ஒவ்வொரு பகுதிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தி.மு.க. அரசின் நலத்திட்டங்களைப் பற்றியும் மக்கள் எவ்வாறு பயன் பெற்றனர் என்ற விவரங்களையும் கேட்டறிந்தனர். மேலும் வீடுகளுக்கே சென்று உறுப்பினர்களை தி.மு.க.வில் சேர்த்தனர். இந்த நிகழ்ச்சிக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார்.
இதில் திருப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், கணக்கம்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வேல்குமார், மாநில பிரசார குழு செயலாளர் உமா மகேஸ்வரி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.