சங்கரன் கோவில், ஜூன் 30 –
சங்கரன் கோவில் காந்தி நகரைச் சேர்ந்த சங்கர் ராஜ் முருகேஸ்வரி தம்பதியினரின் மகன் சந்திரசேகர் இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவியும் இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். குடும்ப சூழ்நிலை காரணமாக திருநெல்வேலியில் உள்ள தனியார் ஏஜென்சி மூலமாக ஓமன் நாட்டிற்கு வேலைக்குச் சென்றார். வேலைக்குச் சேர்ந்த இடத்தில் வேலை சரிவர வழங்கப்படவில்லை. உண்ண உணவின்றி சந்திரசேகர் தாய் தந்தை சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜாவிடம் தனது மகன் வெளிநாட்டில் உணவின்றி சிக்கி தவிப்பதாகவும் அவரை மீட்டுத் தருமாறு கோரிக்கை வைத்தனர். கருணையுடன் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ராஜா எம்எல்ஏ சந்திரசேகர் இந்தியா வருவதற்கு 60,000 ரூபாய் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் திருக்கரங்களால் வழங்க சந்திரசேகர் மீட்டு இந்தியா அழைத்து வருவதற்கு அமைச்சரிடம் ராஜா எம்எல்ஏ வைத்த கோரிக்கையின் படி மீட்கப்பட்டு சங்கரன்கோவில் வருகை தந்த சந்திரசேகரின் தாய் தந்தையரிடம் சேர்த்து வைத்தார். வாலிபர் சந்திரசேகர் தனது குடும்பத்தினருடன் ராஜா எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்தார்.