தருமபுரி, ஜுலை 14 –
தருமபுரி மாவட்ட ஒக்கலிக கவுடர் நலச் சங்கம் சார்பில் 2024- 2025 ஆம் ஆண்டு 10, 12- ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு, கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா மற்றும் மாமன்னன் கெம்பேகவுடாவின் 516-வது ஜெயந்தி விழா தருமபுரி I.M.A. ஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கௌரவத் தலைவர் ஆறுமுக சாமி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் விருதுகள் வழங்கி பாராட்டினார். மாநிலத் தலைவர் வெள்ளிங்கிரி , மாநிலச் செயலாளர் ஐனகரன், மாநில பொருளாளர் பிரகாஷ், மாவட்ட மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் இரத்தினவேல், மாவட்ட தலைவர் மயில்சாமி, மாநில செயற்குழு உறுப்பினர் தண்டபாணி, மாவட்ட பொருளாளர் தங்கராஜ், முரளி வழக்கறிஞர், மாநில, மாவட்ட ஒக்கலிக கவுடர் நலச் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.