ஸ்ரீவில்லிபுத்தூர், செப். 05 –
கிருஷ்ணன் கோயில் அருகே உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகம் மத்திய அரசு கல்வி அமைச்சகம், புதுடில்லி, என்ஐஆர்எப் 2025 தரவரிசைப்பட்டியலை மத்திய அரசு கல்வி அமைச்சர் மாண்புமிகு தர்மேந்திரா ப்ரதான் வெளியிட்டார்.
இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்குள் கலசலிங்கம் பல்கலைக்கழகம் 28-வது ரேங்க் இடம் பெற்று சாதனை புரிந்துள்ளது. மேலும் பொறியியல் பிரிவில் இந்தியாவில் உள்ள அனைத்து பொறியியல் நிறுவனங்களுக்குள் கலசலிங்கம் பல்கலை 33-வது ரேங்க் பெற்றுள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து பிரிவு கல்வி நிறுவனங்களுக்குள் கலசலிங்கம் பல்கலை 48-வது தரவரிசையைப் பெற்றுள்ளது. புதுமையை புகுத்தி புதிய கண்டுபிடிப்பிலும்
11 முதல் 30 தரவரிசையிலும், ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளைக் கொண்ட (எஸ்டிஜி) கல்வி நிறுவனங்களுக்குள் 11 முதல் 50 தரவரிசையிலும் இடம் பெற்றுள்ளது.
வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன், இணை வேந்தர் டாக்டர் எஸ். அறிவழகி ஸ்ரீதரன், துணைத் தலைவர்கள் முனைவர் எஸ். சசிஆனந்த், எஸ். அர்ஜுன் கலசலிங்கம் ஆகியோர் துணைவேந்தர், பதிவாளர், இயக்குநர்கள், டீன்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் அனைவரையும் பாராட்டி வாழ்த்தினர்.



