கிருஷ்ணகிரி, ஜூன் 28 –
வெண்ணாம்பட்டி கிராமத்தில் ஆறு வருடங்களாக பூட்டிய கோயில் முன்பு பூஜை செய்து நூதன முறையில் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் கல்லாவி அடுத்து வீரணகுப்பம் ஊராட்சி வெண்ணாம்பட்டி கிராமத்தில் உள்ள கிராம மக்கள் கோயிலை மீட்டு தர வேண்டி நூதன முறையில் போராட்டம் நடந்தது. 40 ஆண்டுகளாக கோயில் கட்டி வழிபட்டு வந்தோம். தனிநபர் இந்த கோயிலிடம் தனக்கு சொந்தம் எனவும் கோயிலுக்கு வரக்கூடாது என்று வெண்ணாம்பட்டி பொதுமக்களை மிரட்டி வருவதாகவும் இதனால் சுமார் ஆறு ஆண்டுகளாக கோவிலை திறக்காமல் வருவதாகவும் கெட்ட ஆத்மாக்கள் ஊருக்குள் வந்து குழந்தைகள் பெரியவர்கள் வரை உடல்நிலை சரியில்லாமல் வருவதாகவும் உடனடியாக கோவில் திறந்து பூஜைகள் செய்து மாரியம்மன் ஆசியை பெற்றால் தான் நாங்கள் நலமுடன் நோய் நொடியின்றி இருக்க முடியும் எனவும் உடனடியாக கோயிலை திறக்க வட்டாட்சியர் மாவட்ட ஆட்சியர் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவில் வளாகத்தில் அரிசி, பருப்பு எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வைத்து பொங்கல் செய்து படையில் வைத்து சுவாமிக்கு படையிலிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் மற்றும் வருவாய் துறை துணை வட்டாட்சியர் தனலட்சுமி ஆகியோர் அப்பகுதி கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்பொழுது தமிழ் புலிகள் கட்சியினர் மற்றும் ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன், கல்லாவி காவல் ஆய்வாளர் ஜாபர் உசேன், போச்சம்பள்ளி காவல் ஆய்வாளர் நாகலட்சுமி உள்ளிட்ட உதவி காவல் ஆய்வாளர்கள் காவலர்கள் வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.



