ஆரல்வாய்மொழி, ஜூலை 23 –
ஊட்டசத்து வேளாண்மை இயக்கம் சார்பில் மானிய விலையில் தொகுப்பு செடி விநியோகத்தினை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். ஊட்டசத்து வேளாண்மை இயக்கம் சார்பில் வைட்டமின் C சத்துள்ள எலுமிச்சை செடி, வைட்டமின் A சத்துள்ள பப்பாளி செடி, ஏழைகளின் ஆப்பிள் என கூறப்படும் கொய்யா செடி ஆகிய மூன்று செடிகள் அடங்கிய தொகுப்பு ரூ.100 என நிர்வகிக்கப்பட்டுள்ள நிலையில் 2025 – 2026 ஆண்டில் இத்தொகுப்பு செடி தோவாளை தாலுகாவில் சுமார் 2700 நபர்களுக்கு நூறு சதவிகிதம் மானியத்தில் வழங்குவதற்கும் அதனை போன்று மிளகாய், கத்திரிக்காய், தக்காளி, வெண்டைக்காய், கொத்தவரை, கீரை ஆகிய 6 செடிகள் கொண்ட தெருப்பு ரூ.60 என நிர்ணயிக்கப்பட்டு அதனை 100% மானியத்தில் தோவாளை தாலுகாவில் 804 நபர்களுக்கு விநியோகம் செய்வது என முடிவு செய்யப்பட்ட நிலையில் எலுமிச்சை, பப்பாளி, கொய்யா ஆகிய செடிகள் கொண்ட தொகுப்பினை தோட்ட கலை உதவி இயக்குனர் (பொருப்பு) சந்திரலேகாவிடம் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என் தளவாய் சுந்தரம் பெற்றுக்கொண்டு நூறு சதவிகித மானிய தொகுப்பு செடி விநியோகத்தினை தொடங்கி வைத்தார்.