வாடிப்பட்டி, ஜூலை 31 –
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தனியார் கல்லூரியில் உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் சார்பாக மாநில அளவில் நடத்திய சிலம்பப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் வாடிப்பட்டி ஸ்ரீ கணேசா ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு விளையாடினர். இதில் சுருள்வாள் பிரிவில் 7 முதலாம் பரிசும், ஒற்றை கம்பு 8 முதலாம் பரிசும், நான்கு 2 பரிசும், 2 மூன்றாம் பரிசும் பெற்றனர்.
பரிசுகளை உலக சிலம்பம் விளையாட்டுச் சங்க தலைவர் மற்றும் நிறுவனர் எஸ். சுதாகரன், விருதுநகர் மேயர் சங்கீதா இன்பமும் வெற்றி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். இந்த சாதனை மாணவ மாணவிகள் மற்றும் பயிற்சி அளித்த
ஆசான் கே. கணேசன் ஆகியோரை பெற்றோர் மற்றும் பொதுமக்கள் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.