கிருஷ்ணகிரி, ஜூலை 25 –
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மருதேரி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மருதேரி ஊராட்சி மற்றும் குடிமியானஹள்ளி ஊராட்சிகளுக்கு உட்பட்ட 20க்கும் அதிகமான கிராமங்களில் இருந்து 500க்கும் அதிகமான மக்கள் மனுக்களுடன் பொதுமக்கள் பங்கேற்றனர். மேலும் இம்முகாமில் அனைத்து துறை சார்ந்த 16க்கும் அதிகமான துறைகள் நேரடியாக மனுக்கள் பெற்றனர். இந்நிலையில் அரசு தொடர்புடைய முகாமில் பாரத பிரதமர் மோடி மோடி அவர்களின் படம் இடம் பெறவில்லை என்று பாஜ முன்னாள் பொதுச் மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட 10க்கும் அதிகமானோர் இங்கு வந்து கேள்வி எழுப்பினர்.
இதனால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. பேச்சுவார்த்தை செய்து பின்பு வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணனிடம் மனு அளித்தனர். மேலும் தமிழகம் இந்தியாவில் இல்லையா? என்று பாஜவினர் கேள்வி எழுப்பினர். மேலும் மனுவை மேலிடத்துக்கு அனுப்புவதாக காவேரிப் பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் கூறினார். இதனால் முகாமில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.