தருமபுரி, ஜூலை 14 –
தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் விளம்பர ஆட்டோக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் கொடியசைத்து துவக்கி வைத்தும், விண்ணப்பத்தினை பொதுமக்களுக்கு வழங்கி அவர் கூறியதாவது: வருகின்ற 15-7-2025 அன்று முதல் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகம் நடைபெற உள்ளது. நகர்புறத்தில் 13 துறைகள், 43 சேவைகள், ஊராட்சி பகுதிகளில் 15 துறைகள் 46 சேவைகள் இந்த முகாம்கள் மூலம் பொது மக்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கான விண்ணப்பத்தினை வீடு, வீடாகச் சென்று பொதுமக்களிடம் அதிகாரிகள் வழங்கி வருகின்றனர்.
இந்த முகாமிற்கு வரும்போது அந்த விண்ணப்பத்தினை கொண்டு வந்து முகாம் நடைபெறும் இடத்தில் கொடுத்து சேவைகளை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, நகரச் செயலாளர் நாட்டான் மாது, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கௌதம், ஒன்றிய செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.